About This Event
புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா
மற்றும் நலத்திட்ட உதவிகள்
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுக்கா, இருப்புக் குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் அன்பு, அமைதி, சமாதானம், தியாகம், பகிர்வு போன்ற கிறிஸ்துமஸ் திருநாளின் மனிதநேய மதிப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.
விழாவில் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் திரு. M.K. ஆனந்த் (கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்), மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பொருப்பாளர் அருட்பணி S. சகாய செல்வராஜ் நெய்வேலி NLC ஓய்வு பெற்ற சமூக சேவகர் திரு. மூர்த்தி மற்றும் விருதாச்சலம் மனநல மருத்துவர் டாக்டர் தென்றல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 25 சிறப்பு குழந்தைகள், 30 கைம்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், புடவைகள், போர்வைகள், வழங்கப்பட்டன.
மேலும் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அனைவரும் மகிழ்ச்சியுடன் பயனடைந்தனர்.
இந்த நிகழ்ச்சி சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகள் தங்களுடைய கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நடனமாடியும் இயேசு பிறப்பை பற்றி ஆடல் பாடி மகிழ்ந்தனர்