Serving Humanity Since 1995
Donate Now

SJPDT இந்த நிறுவனத்தின் சேவைகள்

Coming Soon All Day Iruppukurichy
Attendees
150+
Duration
6 Hours
Category
Community

About This Event

*வாழ்வை அழகாக்கும் அறக்கட்டளை*
*-உதவும் குணம் கொண்ட குணஸ்தான மேரி*


பொதுவாக இந்த உலகமே அன்பால் இயங்கிக் கொண்டிருக்கிறது. 'எல்லாச் சுமைகளுமே போற்றுதலுக்குரியவை’ என அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் வால்ட் கெல்லி (Walt Kelly) பிறர், நமக்காகத் தாங்கிக்கொள்ளும் பொறுப்பை வெகு அழகாக இப்படிச் சொல்லியிருக்கிறார்.

இளமையில் வறுமை கொடிது, முதுமையில் தனிமை கொடிது என அவ்வையார் சொல்லி இருப்பது போல இளம் வயதில் மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள், வீட்டாரால் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட முதியவர்கள் என அவர்களும் ஒரு அழகான வாழ்வு ஒன்று உள்ளது.

அதை அழகாக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், அறக்கட்டளைகள் பல ஈடுபட்டாலும், தன்னுடைய அண்ணாவின் நினைவாகவும் மாற்றுத் திறன் தங்கையாலும் ஈர்க்கப்பட்டு, இந்த சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காகவும், சிறப்பு குழந்தைகளுக்காகவும் முதியவர்களுக்காகவும் ஒரு அழகாக அறக்கட்டளையை நடத்தி வருகிறார் கடலூர் பெண் ஒருவர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருப்புக்குறிச்சி கிராமத்தில் புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோர், முதியவர்களை பராமரித்து வருகிறார் இந்த பெண்!

இருப்புக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குணஸ்தான மேரி. இந்த சமுதாயத்தில் தனக்காக யாருமே இல்லை என ஏங்கி தவிப்பவர்களுக்காக, அப்பகுதியைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 'தாங்கள் இருக்கிறோம்' என தேடி சென்று உதவி புரிந்து வருகிறார்.

இதுகுறித்து குணஸ்தான மேரி கூறுகையில், என்னுடைய பெற்றோர் அமுல்தாஸ்- வரப்பிரசாதம். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். என்னுடைய அண்ணன் அந்தோணி ராஜ் சாலை விபத்தில் இறந்துவிட்டார். என்னுடைய தங்கை மோனிஷா மாற்றுத்திறன் கொண்டவர்.

திருச்சி சிலுவை கல்லூரியில் சிறப்பு குழந்தைகளை கையாள்வதற்கான பயிற்சிகளை பெற்று, பின்னர் உளவியலில் இளநிலை, முதுநிலை படிப்புகளை படித்துள்ளேன்.

என் தங்கைக்காகவும், என் அண்ணனின் நினைவாலும் தொடங்கப்பட்ட எங்கள் அறக்கட்டளை பல ஆண்டுகளாக சமூதாய மக்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் வசிக்கும் வீடு தான் எங்கள் அறக்கட்டளை. இங்குதான் சிறப்பு குழந்தைகளுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன

எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு எங்களால் முடிந்த சிறு, சிறு உதவிகளை செய்து வருகிறோம். அவர்களின் வீடுகளுக்கு சென்று மாற்றுத்திறன் குழந்தைகளை எங்கள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்து சில பயிற்சிகளையும் வழங்குகிறோம். சரிவர நடக்க முடியாத சிறப்பு குழந்தைகள் கூட தற்போது நடக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் பேச முடியாமல் தவித்த பல குழந்தைகள் பேசத் தொடங்கியுள்ளனர். இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் என்னை அவர்களுடைய குழந்தையாகவே அரவணைத்து பேசுவார்கள்.

நாம் அன்பை மட்டும் கடன் கொடுத்தால் போதும் அது நமக்கு பல மடங்கு வட்டியுடன் திரும்பி கிடைக்கும். ஏழைகளும் கைவிடப்பட்டோரும் இந்த உலகில் உள்ளவரை என் அன்பு பணி ஒருபோதும் ஓய்வதில்லை. அதைத் தொடர்ந்து வழி நடத்த தங்களுடைய ஆதரவும் தேவை என்றார் .


திக்கற்று நிற்பவர்களுக்கு தெய்வம் துணை இருக்கும் என்பார்கள்‌. திசையே தெரியாமல் இருக்கும் பலருடைய வாழ்வுக்கும், பிறரின் உதவியுடன் வாழ்ந்து வரும் எண்ணற்ற குழந்தைகளுக்கும் உதவும் குணம் கொண்ட குணஸ்தான மேரிபோல இன்னும் பலர் வரவேண்டும்!