Serving Humanity Since 1995
Donate Now

SJPDT சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Coming Soon All Day Iruppukurichy
Attendees
150+
Duration
6 Hours
Category
Community

About This Event

ஜோசப்போட வச்சி மேம்பாட்டு அறக்கட்டளையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

🎋🎋🎋சாதி இல்லை, மதம் இல்லை
மனிதன் மட்டும் உயர்ந்தவன்
உழைப்பே உலகின் அடையாளம்
என்பதை உணர்த்தும் திருநாள்.
அடுப்பும் ஒன்றே, பாத்திரமும் ஒன்றே
அம்மணியாய் பொங்கும் அரிசியில்
ஏற்றத் தாழ்வு கரையும் போது
சமத்துவம் சுவையாகிறது.
உழைக்கும் கரமே உயர்ந்தது
என்று உலகிற்கு உரக்கச் சொல்ல
எல்லோரும் ஒரே சமூகமென
உணரச் செய்யக் கொண்டாடப்படுகிறது
இந்த சமத்துவப் பொங்கல்.
பசி இல்லா சமூகமாய்
பயமில்லா மனிதனாய்
மரியாதையோடு வாழும் உரிமை
எல்லோருக்கும் சமமென்பதை
நினைவூட்டும் நாளே
சமத்துவப் பொங்கல்.
சாதி, மதம், வேற்றுமை கடந்து
சமத்துவம் பேசும் திருநாளே,
உழைப்பின் உயர்வை உலகறியச் செய்யும்
உன்னத விழாவே சமத்துவப் பொங்கல்.
மனிதன் காப்போம் உழைப்பாளி அறக்கட்டளையும்
இளைஞர் தோழர்களும் இணைந்து
ஒற்றுமை ஒளியை ஏற்றி வைத்த
இந்த அரிய முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.
உழைப்பாளி தான் உலகின் அடித்தளம்
என்ற உண்மையை உணர்த்தவே
எல்லோரும் ஒரே மனிதர் என்ற சிந்தனையை
வேரூன்றச் செய்யவே கொண்டாடப்படுகிறது
இந்த சமத்துவப் பொங்கல்.
இளைஞர்களின் செயல் நம்பிக்கையாய்
நாளைய சமத்துவ சமூகத்தின்
அடித்தளமாக மாறட்டும் –
உங்கள் சேவை என்றும் பாராட்டுதலுக்குரியது.🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋