About This Event
மாற்றத்தின் வீரர்கள்…
மனிதநேயத்தின் முகங்கள்…
நம் செல்லக் குழந்தைகளின் வாழ்வை ஒளிர வைக்கும் நீங்கள்…”
புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில், தங்களை அனைவரையும் சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எமது அன்பு சிறப்பு குழந்தைகளுக்காக நீங்கள் இதுவரை வழங்கிய அன்பான உதவிகளையும், தொடர்ந்தும் தருகின்ற உறுதுணையையும் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு தேவையில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது எமது அறக்கட்டளையின் பண்பும் பொறுப்பும் ஆகும். இந்த ஆண்டும் அதனை இன்னும் சிறப்பாக நிறைவேற்றுவதற்கான முயற்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிகழ்வு தாராள உள்ளம் கொண்ட நல்ல மனங்களின் ஆதரவால் மட்டுமே நடைபெறக்கூடியது என்பதை பெருமையுடன் நாங்கள் உணர்கிறோம். இந்த ஆண்டில் பயனாளர்களாக
25 சிறப்பு குழந்தைகள்,
30 ஏழை கைம்பெண்கள்,
25 வயது முதிர்ந்தோர்கள்
இவர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு போர்வை, புடவை, துண்டு, மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.
எங்கள் பணியை முன்னேற்றுவதில் தங்களது தாராள மனம் எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்கும் என நம்புகிறோம். தங்களால் இயன்றதை அன்போடு பகிர்ந்து எங்கள் மகிழ்ச்சியும், எங்கள் குழந்தைகளின் நலனும் பெருக உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை
Mobile number 8072409833